சுட சுட வெயிலும்
சொத சொத சாலையும்
கரு கரு சாக்கடையும்
சேர்ந்து செய்த கலவை - சென்னை
- ஸ்டீபன் ராஜ்குமார்
சட சட மழையும் சுட சுட வெயிலும் சொத சொத சாலையும் கரு கரு சாக்கடையும் சேர்ந்து செய்த கலவை - சென்னை - ஸ்டீபன் ராஜ்குமார்
1 Comment
படத்துல டூயட் சீனுல பாக்குற அமெரிக்கா வேறங்க... என்ன தான் இருந்தாலும் இது ஒரு அன்னிய நாடு. நாம எவ்வளவோ பீட்டர் இங்கிலீஷ் பேசனாலும், நாம போடுற சட்ட பேன்ட வெச்சே நாம எல்லாம் இந்த ஊரு இல்லன்னு கண்டுபுடிசிடுவானுங்க. இந்தியாவுல என்னன்னா அமெரிக்க ஏதோ சொர்க்கம்னு நெனச்சிகிட்டு இருக்கோம். இங்க இருகவுங்களும் இந்தியா ஏதோ பிச்சகார கண்ட்ரி மாதிரியும், அங்க இருகவுங்க எல்லாம் காட்டு வாசி மாதிரியும் நெனச்சிகிறாங்க. உண்மை என்னனாங்க..... நம்ம ஊர்ல சிக்னல் டு சிக்னல் தான் பிச்சகாரங்க ..... ஆனா இங்க ரோட்ல, ரயில்ல எங்க பாத்தாலும் பிச்ச எடுக்குறானுங்க... இங்கேயும் நிறைய ரோடு விபத்துக்கள்.... சிக்னல்ல பச்சை மனுஷன் வந்தாதான் ரோட கிராஸ் பன்னனுமுன்றது இங்கும் நிறைய பேருக்கு தெரில... அங்க கால் சுலிக்கிக்கிச்சினா கூட ரெண்டு நிமிஷத்துல டாக்டர் கிட்ட போய்டலாம், இங்க உங்களக்கு ஹார்ட் அட்டாக் வந்த கூட ரெண்டு வாரம் கழிச்சி தான் அப்பாயிண்டுமெண்டு (Appointment) குடுப்பானுங்க...... அதுவும் ப்ரீ இல்லங்க.... சும்மா டிரௌசெற (Trouser) உருவிடுவாங்க. சொந்த வீடுனாலும் பிரச்சனை .... வாடக வீடுனாலும் பிரச்சனை.... கூடுவாஞ்சேரிய விட இங்க சில ஏரியால வீடு விலை கம்மி.....! நம்ம ஊர்ல ஆபரேஷன் பண்ணாதான் கிட்னி திருடுவாங்க - இங்க கிட்னிய வித்தாதான் ஆபரேஷன் பண்ணிக்க முடியும்... நம்ம ஊர்ல பெட்ரோல் தான் காஸ்ட்லி ... இங்க மோர் கூட காஸ்ட்லி... இங்க ட்ரைன்ல எல்லாம் ஏசி போடுவன்ங்க ஜாலியா சோபால படுத்துகுட்டு போலாமுன்னு நெனைக்காதீங்க... கிரௌடு நேரத்துல புட் போர்டு (Foot Board) கூட அடிக்க முடியாது....அலேக்கா டைட்டா பேக்கிங் பண்ணி கதவ மூடிடுவானுங்க..... இந்தியாவுல.. கடன் அன்பை முறிக்கும்னு எல்லா கடைலயும் எழுதி வெச்சிருக்காங்க.... இங்க டாய்லெட் பேப்பர்ல இருந்து சோப்பு சீப்பு எல்லாத்தையும் இ ம் ஐல (EMI) வித்து நாட்டையே கடன்கார நாடா மாத்திட்டானுங்க. வெள்ளை தோல பாத்துட்டு வெளி நாட்டு மோகத்துல தாய் நாட வெறுக்காத ! இட்டிலியும் தோசையும் தின்ன பச்சை தமிழனுக்கு வேலைக்கு ஆகாது வெளி நாடு - இந்த எலெக்ட்ரிக் குக்கர்ல வேகாது நம் பருப்பு. இப்படிக்கு அன்புடன் பாசத்துடன் என்றும் கூடுவான்சேரியிலேயே (குட்டி ஜப்பான்) வாழ விரும்பும் -ஸ்டீபன் ராஜ்குமார் இப்போ பாத்தீங்கன, நான் எழுதியிருக்குறதுல நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும் - அங்க தான் நிக்குறான் இந்த பச்சை தமிழன் - சியர்ஸ் (Cheers) ! *இவை அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள். யாரையும் புண் படுத்தியிருந்தால் தயவு செய்து.... நாயர் கடை சாயா குடித்து உங்கள் மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்.* கதிரவனின் கோபம் தான் இந்த கத்திரி வெயிலோ ?
மண்டையை பிளக்கும் இந்த வெயிலால் என்ன பயனோ! சூரியனே கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்! -ஸ்டீபன் ராஜ்குமார் எத்தனை சிறிய உடலடா - அதனுள்
ஆயிரத்தெட்டு கவலையடா! - ஸ்டீபன் ராஜ்குமார் பணத்தை பார்த்ததும் மாறும் மனம் - அது
மனமல்ல, "பிணம்" - ஸ்டீபன் ராஜ்குமார் எண்ணிக்கையில் அடங்காதது
கடல் மண்ணும், வானத்து நட்சத்திரங்கள் மட்டும் அல்ல! மனிதனின் ஆசைகளும் தான்! -ஸ்டீபன் ராஜ்குமார் |
Categories
All
Archives
January 2021
google.com, pub-0060602840003535, DIRECT, f08c47fec0942fa0
|